ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.59 லட்சம்

கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு, அதன் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 59 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களில் ஏற்பட்டிருக்கும் போக்கின் ஒரு பகுதியே இதுவாகும்.

பிட்காயின் மதிப்பு அதிகரித்தன் பின்னணியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ்கேல், பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி போன்ற முதலீட்டு நிறுவனங்கள், நிலையற்றது என்று வர்ணிக்கப்படும் இந்த டிஜிட்டல் கரன்சியை வாங்க பில்லியன்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன.

இந்த முதலீட்டின் காரணமாக, இந்த சக்திவாய்ந்த நிறுவனங்கள் ‘பிட்காயின் திமிங்கலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.