தங்கம் விலை இன்றும் மாறவில்லை

தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக மாறாமல் அப்படியே இருக்கிறது.
சென்னையில் தங்கம் விலை இன்றும் மாறவில்லை. மீண்டும் விலை உயர்வதற்குள் நகை வாங்கலாம்..!சென்னையில் இன்று (மார்ச் 12) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,150 ஆக உள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 49,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 79.50 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 79,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.நகை வாங்குவோர் சமீப காலமாகவே பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மார்ச் மாதத் தொடக்கம் முதலே விலையேற்றம் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக விலை உயரவில்லை என்பதால் நகை வாங்குவோருக்கு நிவாரணம் கிடைத்துள்ளது

செய்தி பாபு சென்னை.