திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு
2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. திமுக கூட்டணிக்கு வரும் மக்களவை தேர்தலில் எங்களின் ஒத்துழைப்பு இருக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.