தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு ஆதரவு என்ற பெயரில் கலவரத்தை தூண்டிய பெண் ஆசிரியை சஸ்பெண்ட்தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

கலவரத்தை தூண்டும் வகையிலும், போராட்டத்தை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த பெண் ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாட பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி. இவர், கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அரசுக்கும், கல்வித்துறைக்கும் எதிராக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதில் பல பதிவுகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை போராட்டத்தை தூண்டும் வகையிலும், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட தூண்டும் வகையிலும் எழுதியுள்ளார். சமூகங்களுக்கு எதிராகவும் கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்துள்ளார். இது குறித்து சமூக ஆர்வலர்களும், அமைப்புகளும் அரசிடம் புகார் செய்தனர்.