ஷில்பா மஞ்சுநாத்
ஜேஎஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜேஎஸ்பி சதீஷ் தயாரித்து எழுதி இயக்கி நடித்துள்ள படம், ‘சிங்கப்பெண்ணே’. ஹீரோயினாக ஷில்பா மஞ்சுநாத், நிஜ டிரையத்லான் வீராங்கனை ஆர்த்தி நடித்துள்ளனர். மற்றும் சமுத்திரக்கனி, பிரேம் குமார், சென்ராயன், எம்.என்.நம்பியார் பேரன் தீபக் நம்பியார், ‘பாய்ஸ்’ ராஜன், ‘பசங்க’ சிவகுமார், ஏ.வெங்கடேஷ், ஜானகி, இந்துமதி நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசை அமைத்துள்ளார்.