அண்ணாமலை பகீர் தகவல்

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீமான் தரப்பு தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்களின் கட்சி சின்னம் கிடைக்காமல் போனதற்கு பாஜகதான் காரணம் என குற்றம்சாட்டினார்.ஆனால் நாம் தமிழர் கட்சியினர் சின்னத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை என்றும் சென்னையில் வெள்ளம் வந்துவிட்டது. அதனால் விண்ணப்பிக்க முடியவில்லை எனதெரிவித்துள்ளார்கள் என்றும் கூறினார். கட்சி சின்னம் என்பது 6 சதவீத வாக்கு, இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது ஒரு மக்களவை உறுப்பினரைப் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள்படிதான் ஒதுக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.