தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த 2019ம் ஆண்டில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வருடங்களுக்கு பின்பு கொலையாளியின் அடையாளம் தெரிந்தது. அவரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது, பிரியாணியில் சிக்கன் இல்லாததால் ஆத்திரமடைந்த இளம்பெண், வாலிபருடன் தகராறு செய்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த வாலிபர், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து, சம்பவ இடத்திலேயே அந்த பெண் உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான இளம்பெண் யார், அவரை கொலை செய்த வாலிபர் யார், என விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பின்பு தேவியை கொலை செய்தது யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது