காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் கைது!
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். இங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சமைப்பதற்காக அழைத்து சென்று பெண்களை தொடர் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஷேக் ஷாஜஹான் தலைமறைவானார். தலைமறைவான ஷாஜகான் ஷேக்கை கைது செய்ய வலியுறுத்தி சந்தேஷ்காலி கிராமத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து தேசிய பட்டியலினத்தோர் ஆணைய பிரநிதிகள் குழு சந்தேஷ்காலி சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது.