அண்ணாமலை அதிரடி

“கனிமொழி அக்கவை திமுகவில் இருந்து ஒதுக்கி தானே வெச்சிருந்தீங்க.. இப்போது மட்டும் என்ன அவங்க மீது திடீர் கரிசனம் உங்களுக்கு?” என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பார்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். நேற்று திருப்பூரிலும், இன்றைக்கு நெல்லையிலும் நடைபெற்ற பாஜக கூட்டங்களில் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். இதனிடையே, நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும் கலந்துகொண்டார். ஆனால், இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, கனிமொழியின் பெயரை உச்சரிக்கவில்லை. இதற்கு கனிமொழியும் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதே தூத்துக்குடியில் இதுவரை கனிமொழி அக்காவுக்கு திமுக மரியாதை கொடுத்திருக்காங்களா? எதுவுமே கொடுக்கல.

இன்னைக்கு கனிமொழி அக்கா மீது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு திடீர் அக்கறையும், பாசமும் வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகாலமாக நானும் பார்க்கிறேன்