டிடிவி தினகரன் கோரிக்கை
தமிழகத்திற்கு கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் கர்நாடக அரசு சரிவர தண்ணீர் திறக்கவில்லை. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டாவுக்கு செல்லும் தண்ணீரும் குறைந்தது. இதனால் குறுவை சாகுபடி பயிர்கள் காய்ந்த நிலையில், அதற்கு ஹெக்டெர் ஒன்றுக்கு 13,000 ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் குறுவை சாகுபடியில் மகசூல் குறைந்ததால், அரிசி உற்பத்தியும் குறைந்துள்ளதாகவும், இதனால் அரிசு விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் அனைத்து வகையான அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் 15 வரை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன” என்று சுட்டிக்காட்டி உள்ளார்.