கடைசி நேரத்தில் முடிவை மாற்ற திட்டம்
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு சென்று கட்சி நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள், கோயில் வழிபாடு ஆகியவற்றை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இந்த பயணத்தில் எதிர்பார்க்கப்பட்ட சில சம்பவங்கள் நடைபெறாத நிலையில் மார்ச் 4க்குள் அவை நடக்கும் என்கிறார்கள்.
பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சி பொதுக்கூட்டத்திற்கு திரண்ட மக்கள் கூட்டம் மோடிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்ததாம். அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பயணம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பாஜக தலைமை நினைக்கிறது. ஆனால் கூட்டணியை அமைப்பது, கட்சிகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றில் அண்ணாமலை மிகவும் பின் தங்கிவிட்டார் என்று மேலிடம்