பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… டிக்கெட் புக்கிங்கில் பெரிய ஏமாற்றம்!
கோவை ஜங்ஷன் – பெங்களூரு கன்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று 60வது நாளாக இயக்கப்பட்டு வருகிறது. மினி வந்தே பாரத் 2.0 மாடலாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயில் 25 கிலோவாட் 50 ஹெர்ட்ஸ் மின்சார சக்தியுடன் இயக்கப்படுகிறது. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில்களை அப்கிரேட் செய்து வரும் நிலையில், கோவை – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மணிக்கு 58 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்கிறது.
இதனை போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தி 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 374 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கிறது. 20642 / 20641 என்ற எண் கொண்ட கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. வியாழன் அன்று மட்டும் இயக்கப்படாது. கவாச் என்ற பாதுகாப்பு அம்சம் கொண்டது.
தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் இந்த ரயில், மொத்தம் 5 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. அவை திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகியவை ஆகும். இந்த ரயில் தொடங்கி வைக்கப்பட்டத்தில் இருந்து தற்போது வரை இருக்கும் முக்கிய சிக்கல் நேர அட்டவணை. அதிகாலை 5 மணிக்கே கோவை ஜங்ஷனில் புறப்பட்டு விடுகிறது. நண்பகல் 11.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
இதுதொடர்பாக கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்