இமாச்சல பிரதேச ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரசுக்கு அதிர்ச்சி அளித்த பா.ஜ.க;

காங்கிரஸ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்ததால், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வியை தோற்கடித்ததன் மூலம், பா.ஜ.க., இமாச்சலப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மக்களின் ஆணையையும் நம்பிக்கையையும் காங்கிரஸ் அரசாங்கம் இழந்து விட்டது” என்று கூறி, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அரசாங்கத்தை பதவி விலகுமாறு பா.ஜ.க அழைப்பு விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை முதல்வர் சுக்விந்தர் சுகு நிராகரித்தார்.

சட்டசபையின் வருடாந்திர பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சட்டசபையில் மாநில நிதி மசோதா மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

68 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பா.ஜ.க.,வின் ஹர்ஷ் மகாஜனும், காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வியும் தலா 34 வாக்குகளைப் பெற்றதால், முன்னாள் காங்கிரஸ் தலைவரான பா.ஜ.க.,வின் ஹர்ஷ் மகாஜன், தேர்தலில் வெற்றி பெற்றார். இரண்டு சீட்டுகளில் இருந்து, எடுக்கப்பட்ட ஒரு சீட்டு அபிஷேக் மனு சிங்வியின் பெயரைக் கொண்டிருந்தது, எனவே விதிமுறைகளின்படி அவர் “விலக்கப்பட்டார்” மற்றும் ஹர்ஷ் மகாஜன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க.,வின் 25 எம்.எல்.ஏ.,க்களுடன் ஒப்பிடும்போது காங்கிரஸுக்கு 40 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர், மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பா.ஜ.க நம்பியிருந்தது.