கட்டணம் கட்டுப்படி ஆகுமா

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் பயணிகள் ஓய்வறை – கட்டணம் கட்டுப்படி ஆகுமா?

தமிழ்நாட்டில் அதிகமான பயணிகள் வந்து செல்லும் ரெயில் நிலையங்களில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் நடைமேடை 6-ல் சொகுசு வசதிகளுடன் கூடிய பயணிகள் ஓய்வறை கடந்த 19-ந்தேதி தொடங்கப்பட்டது. இதனை தனியார் நிறுவனத்திடம் 5 ஆண்டுக்கு ரூ.17 கோடியே 75 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது

மேலும் 34 இருக்கைகளுடன் கூடிய உணவருந்தும் வசதியும் உள்ளது. கழிவறை வசதியுடன், குளிப்பதற்கும், உடை மாற்றுவதற்கும் கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.