குடிநீர் இல்ல, கதறும் கர்நாடகா

கோடைக் காலத்தில் மிக மோசமான குடிநீர் பிரச்சினையை சந்தித்தால் என்னவாகும்? நினைத்து பார்க்கவே பகீர் என்கிறது. ஆனால் கர்நாடகா அப்படி ஒரு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் பெங்களூரு நகரை சுற்றி ஒலித்த அபாயக் குரல் தற்போது மாநில தழுவிய அளவில் பெரிதாக ஒலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் ஆகியவை உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

தற்போதைய சூழலில் 18 மாவட்டங்களை சேர்ந்த 46 தாலுக்காக்களில் குடிநீர் தட்டுப்பாடு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதை சமாளிக்கும் வகையில் 183 தனியார் போர்வெல், 58 டேங்கர்கள் மூலம் மேற்சொன்ன தாலுக்காக்களில் உள்ள 156 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.