த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை
தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியை நன்றி தெரிவிக்க சந்தித்ததாக த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் த.மா.கா. இணைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை யுவராஜா சந்திக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் த.மா.கா. அ.தி.மு.க. கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம் அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம். தலைவர் திரு. G.K.வாசன் அவர்கள் பா.ஜ.க வுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்கள்.