குறைந்த விலையில் இடுபொருட்கள் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையில் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.குடுமியான்மலையில் தமிழ்நாடு அரசு வேளாண்துறை மூலம் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் கடந்த 2021 முதல் செயல்பட்டு வருகிறது.

அன்னவாசல் வேளாண் இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் உயிரியல் கட்டுபாட்டு காரணிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கும் அனுப்பப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வேளாண் பயிர்கள் சாகுபடியின் போது பயிரைத்தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு எண்ணற்ற இரசாயன பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த இரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால் மண்வளம், மனித இனம் மற்றும் கால்நடைகளுக்கு பல பாதகமான விளைவுகள் ஏற்படுகிறது. மேலும் பயிருக்கு நன்மை தரக்கூடிய பூச்சிகளையும் அழித்து

கடந்த ஆண்டு (2022 2023) இங்கிருந்து 15 டன்கள் வரை உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடப்பாண்டில் (2023-24) டிரைகோடெர்மாவிரிடி (7575 கிலோ) சூடோமோனாஸ் புளூரொசன்ஸ் (8200 கிலோ) மற்றும் மெட்டாரைசியம் (2000 கிலோ) உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள 13 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

எனவே, விவசாயிகள் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை வாங்கி பயன்பெறுமாறும் கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.