நீலகிரியில் அடுத்த சிறிய ரக பஸ்கள் புதிதாக இயக்கப்படும்

 நீலகிரி மாவட்டத்தில் அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து சிறிய ரக அரசு பஸ்கள் அனைத்தும் புதிதாக இயக்கப்படும் என ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.8.32 கோடி மதிப்பில் 16 புதிய சிறிய ரக அரசு பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அருணா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதனை தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை வகித்து, 16 புதிய சிறிய ரக பஸ்களை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். 25 ஆண்டுகள் விபத்தில்லாமல் பணிபுரிந்த 7 ஓட்டுநர்களுக்கு தங்க பதக்கமும், 10 ஆண்டுகள் விபத்தில்லாமல் பணிபுரிந்த 45 ஓட்டுநர்களுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். பணி காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 3 ஓட்டுநர்கள், 10 நடத்துநர்களுக்கு பணி நியமன ஆணை, மேலும் கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் தயாரிக்கப்படும் சேரன் பெயிண்ட் விற்பனை செய்ய சிட்கோ குறிச்சி வளாகத்தில் சில்லறை விற்பனை நிலையத்தையும் துவக்கி வைத்தார்.

 இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரூ.3,050 கோடியை வழங்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி டீசல் மானியம் ரூ. 1,500 கோடி, மாணவர்கள் இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1,500 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் என்கிற மாதன், ஊட்டி மண்டல பொது மேலாளர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை நிதி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

நிறுத்தப்பட்ட வழித்தடங்களான பி.மணியட்டி – கோவை, ஊட்டி – குண்டல்பேட் இடையே மீண்டும் இயக்கப்படுகிறது.