2025 வரை சிவகார்த்திகேயன் கால்ஷீட்
வகார்த்திகேயன் ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார்சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் பட்டியல் வளர்ந்து வரும் நடிகர்களின் கனவுப்பட்டியலை ஒத்திருக்கிறது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஸ்பைடர், சர்கார், தர்பார் என தொடர்ச்சியாக படங்கள் சறுக்க, நீண்டை இடைவெளி எடுத்து, தனது புதிய படத்தை முருகதாஸ் தொடங்கியுள்ளார். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்குப் படங்களுடன் மேலும் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மாஸ்டர், லியோ படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டுள்ளது. இந்தப் படத்தை அயலானை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்க வாய்ப்புள்ளது. ஆர்.ரவிக்குமார் தற்போது சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதற்கான முன்தயாரிப்புகளில் உள்ளார். இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து அவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுக்காக சிவகார்த்திகேயனை இயக்குவார் என்கிறார்கள்.