அரசு நற்சான்றிதழ் வழங்குமா…?

அரசு பதவிக்கு போட்டியிடுபவர்கள் குற்ற , கொள்ளை , மோசடி வழக்குகளில் பின்னணியில் இல்லாதவர் என அரசு நற்சான்றிதழ் வழங்க வேண்டும்.

இதில் முறைகேடு நடந்தால் சான்றிதழ் அளித்த அனைத்து மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனக்கருதி பதவி நீக்கம் செய்து அதிகபட்சம் 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்க வேண்டும்.

வெற்றி பெறுபவர்கள் 5 ஆண்டுகள் என்பதை குறைத்து 4 ஆண்டுகள் என கொண்டு வந்து 2 வது ஆண்டில் மீண்டும் மக்களிடம் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் இவை அனைத்து தேர்தல்களும் மக்களின் வாக்காளர் அடையாள அட்டையையுடன் , ஆதார் எண்ணின் அடிப்படையில் OTP பெற்று , ஒப்புகை சீட்டுடன் அவரவர் கைபேசியில் நடத்த வேண்டும்.

அரசு பதவியில் உள்ளவர்கள் நம்பிக்கை இழந்தால் , இதில் இரண்டாவதாக வெற்றி பெற்றவர் அந்த தொகுதி MLA , MP , கவுன்சிலர் அரசு பதவியை மீதமுள்ள ஆண்டுகளுக்கு தொடருவார்கள் என அறிவிப்பு வரவேண்டும். நான்கு ஆண்டுகள் முழுவதும் அரசு பதவியில் இருந்து முழுமை அடைந்து வெளியேறும் போதும் நற்சான்றிதழ் பெறவேண்டும்.

இதில் பதவி விலகுபவர்கள் குற்ற , கொள்ளை , மோசடி என எந்தவிதமான செயலிலும் ஈடுபடவில்லை என 90 நாட்களுக்குள் அரசாங்க சான்றிதழ் பெற வேண்டும்.

இதில் முறைகேடு நடந்தால் அதனை கண்டுபிடித்து அந்தந்த துறை சார்ந்த அனுமதி சான்றிதழ் பரிந்துரைத்த அதிகாரிகள் அனைவரும் பதவியிழந்து அனைவரும் சேர்த்து கூட்டு சதி என கருதி அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை சிறப்பு நீதி மூலம் குற்ற இழப்பு தொகையையும் அத்துடன் , தொகையின் 10 மடங்கு கூடுதல் அபராதம் அரசுக்கு வழங்க வேண்டும் குற்றம் சட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் வெளிவர முடியாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் , இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவானால் அல்லது இறந்து விட்டால் அவர்கள் வாரிசுகளுக்கு இந்த அபராதமும் தண்டனையும் பொருந்தும் என தீர்ப்பும் இருக்கவேண்டும்…
இந்த கனவு பலிக்குமா…

செய்தி கோவை பாலசுப்பிரமணியன்.