காங்கிரஸ் – ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு
ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதி செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக உள்ளது. தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன
தே சமயம் இந்தியா கூட்டணியில் பல மாநிலங்களிலும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 63 தொகுதிகளை சமாஜ்வாதி மற்ற கட்சிகளுடன் பகிர்ந்துகொள்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி டெல்லி உள்பட 4 மாநிலங்களுக்கான கூட்டணியை உறுதி செய்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் இன்று கூட்டாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இதுதொடர்பான தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.