இளைஞர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர்
ஈரோடு அருகே பட்டியலின இளைஞர் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச்சலூர் அருகே பட்டியலின இளைஞர் மீதும் அவரது பட்டியலின குடும்பத்தினர் மீதும், பாஜக பிரமுகர் நண்பர்களுடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். குள்ளரங்கன்பாளையத்தை சேர்ந்த பட்டியலின கல்லூரி மாணவர் ரமணிசந்திரன், கழிவுநீர் கால்வாய் அடைப்பு பற்றி புகார் தெரிவித்த நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.