போக்குவரத்துத்துறை அறிவிப்பு

தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

 தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஞாயிறன்று சென்னையில் 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பயணிகள் தேவைக்காக மாநகர பேருந்துகளை நாளை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது

ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தாம்பரம், கிண்டி, தியாகராயர் நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.