நடுக்கடலில் வீசிய தங்கக்கட்டிகளை தேடும் பணி தீவிரம்
இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்து நடுக்கடலில் வீசிய தங்கக்கட்டிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முத்துக்குளிப்போர் 4 பேர் மற்றும் இந்திய கடலோரக்காவல் படை வீரர்கள் குழு ஆழ்கடலில் தங்கக்கட்டிகளை தேடி வருகின்றனர்.