ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறிய தகவல்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜிகே வாசன். இவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சியை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அவர் இடம் பிடித்தார்

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெற உள்ளது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் தான் எந்த கூட்டணியில் இடம்பெற்றாலும் கூட வரும் நாடாளுமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் விரும்புகிறார். இதனால் தேர்தல் ஆணையத்திடம் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கும்படி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சைக்கிள் சின்னம் ஒதுக்குவது பற்றி இன்னும் தேர்தல் ஆணையம் முடிவு செய்யவில்லை. இத்தகைய சூழலில் தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தாக்கல் செய்த மனுவில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்ததாக கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபல் ஆஜராகி, ஆணையத்திடம் தமிழ் மாநில காங்கிரஸ் அளித்த மனுவில் குறைகள் இருப்பதாகவும் அதனால் அந்த குறைகளை சரி செய்து மீண்டும் அளித்தால் அந்த மனு பரிசீலிக்கப்படும் என கூறினார். மேலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசின் மனு பரிசீலிக்கபடும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ் மாநில காங்கிரசின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/will-tamil-maanila-congress-party-get-bicycle-symbol-election-commission-says-this-in-chennai-high-585471.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky&story=3

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/will-tamil-