வெளியே வந்த பாஜக ஜெயலட்சுமி..
பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமியின் ட்வீட், இணையத்தில் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
கடந்த 2 வருடமாகவே, சினேகன் – நடிகை ஜெயலட்சுமி விவகாரம் நடந்து வருகிறது.. 2022ல் ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரை பயன்படுத்தி நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, நிறைய பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை கமிஷனர் ஆபீசீல் புகார் அளித்திருந்தார்
இதைபார்த்த நடிகை ஜெயலட்சுமி, சினேகன் அவதூறு பரப்புவதாக சொல்லி, போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் தந்தார்.. இப்படியே 2 பேரும் மாறி மாறி, போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களை தந்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வந்தனர். ஒருகட்டத்தில் 2 பேருமே கோர்ட்டுக்கு போனார்கள்.. நீதிமன்ற உத்தரவுப்படி, திருமங்கலம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இதைக்கேட்டதுமே ஜெயலட்சுமி ஆவேசம் அடைந்தார்.. திமுகவினரையும் முதல்வரையும் திருப்திப்படுத்த எந்த தவறுமே செய்யாத என்னை போலீஸார் கைது செய்கிறார்கள் என்று கொந்தளித்தார்.. பிறகு போலீஸ் ஜீப்பில் அவரை ஏற்ற முயன்றபோது, மீண்டும் சீறினார்.. நான் என்னுடைய காரில்தான் வருவேன், போலீஸ் ஜீப்பில் என்னை ஏற்றி செல்லும் அளவுக்கு, நான்எந்த தப்பும் செய்யவில்லை, நான் ஒன்றும் தப்பிச்சு ஓடிட மாட்டேன்.. வேணும்னா, என் காரிலேயே போலீஸாரும் வரட்டும்.. தப்பு செய்பவர்களை எல்லாம் கைது செய்யாமல், என்னை போன்ற அப்பாவிகளை ஏங்க கைது பண்றீங்க? என்று பொங்கியபடியே இருந்தார்.
அதனால், ஜெயலட்சுமியை சமாதானம் செய்து, ஜீப்பில் ஏற்றி அழைத்து செல்வதற்குள் போலீசாருக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.. வருகிற மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து, புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார் ஜெயலட்சுமி.. ஆனால், நேற்றைய தினமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.. ஜாமீனில் வந்ததுமே நடிகை ஜெயலட்சுமி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “நீதி வெல்லும் வருங்காலம் பதில் சொல்லும், எனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.