புறம்போக்கு நிலங்களை மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

சென்னை: புறம்போக்கு நிலங்களை மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மெய்க்கால், மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் அரசின் 97 நலத் திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். சிப்காட் தொழில் பூங்கா, ஐடி பூங்கா உள்ளிட்டவற்றுக்கு நிலம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கிய புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யவோ, பட்டா மாறுதல் செய்யவோ தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.