வெதர்மேன் தகவல்-100 ஆண்டுகளில் அதிக ஜனவரி மாத மழை

சென்னையில் ஜனவரி மாத மழையை பொறுத்த மட்டில், கடந்த  15 மணி நேரத்திற்குள் 7 மடங்கு அதிகம்  பெற்றுள்ளோம். பெய்து வரும் மழையில், அதிகப்பட்சமாக தரமணியில் 170 மி.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் இதுவரை சுமார் 20 மிமீட்டர் அளவிலேயே மழை பெய்து வந்துள்ளது. மழை இன்னும் சில மணி நேரம் தொடர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருப்பதுடன்,  அடுத்த சில மணிநேரங்களில் கடலோரப் பகுதிகளிலிருந்து கடைசி மேகங்கள் நகர்ந்து நகரின் உட்புறப் பகுதிக்குச் சென்றபின் படிப்படியாகக் குறையத் தொடங்கும். 1915ம் ஆண்டுக்கு பிறகு, முதன்முதலாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்,  100 ஆண்டுகளில் அதிக ஜனவரி மாத மழை தற்போது பெய்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.