திருவள்ளுவரின் மடைமாற்றுச் சிந்தனைகள் – 3

அமிழ்தம் என்பது ஆரியரின் அதீத கற்பனையில் உருவான
நம்ப முடியாத கருத்தாக்கம்; கதை, நம்பிக்கை.

திருவள்ளுவர் காலத்தில் அந்த
நம்பிக்கை பரவலாக இருந்துள்ளது.

அந்த விண்ணுலகக் கற்பனையில் இருந்து
மக்களை மடைமாற்றம் செய்ய
எண்ணிய திருவள்ளுவர்,
அதைவிட இனியன மண்ணுலகில் உள்ளன என
மழை ( குறள். 11), பெற்ற பிள்ளைகள் சிறு கை அளாவிய கூழ் ( குறள். 64 ) ; கற்புடைய மனைவியின் தோள் தழுவல்
( குறள். 1106) ஆகியவற்றை இனங்காட்டியுள்ளார்.

பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்