டொனால்டி டிரம்ப் தேர்தல் தோல்வி
அமெரிக்க அதிபரான டொனால்டி டிரம்ப் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவ்வப்போது பேசிவரும் டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வருகிறார். டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்படும் அவரது ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வந்தனர்.