BSF படையினர் சைக்கிளில் பயணம்
மாற்றுத் திறனாளிகளிடம் பாரா விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த BSF படைப்பிரிவை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 30 மாற்றுத்திறனாளிகள் கடந்த 18ம் தேதி காஷ்மீரில் இருந்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். பல்வேறு மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 842 கிலோமீட்டர் தூரத்தை 44 நாட்கள் பயணத்தில் நிறைவு செய்த BSF படைப் பிரிவினர் கன்னியாகுமரி வந்தடைந்தனர்.