இன்சூரன்ஸ் தொழிலாளர்கள் பொதுமக்கள் எதிர்ப்பு
இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 24 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் ,முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் நலனை பாதுகாக்க வேண்டியும்பாலிசிதாரர் நலனை பாதுகாத்திட அவர்கள் தங்கள் பாலிசி முதிர்வு அடைந்த பின்முழுமையான முதிர்வு தொகையை பெற உதவிடும் வகையில் ஐ ஆர் டி ஏ பரிந்துரைத்துள்ள பீமா சுகம் பரிவதனை திட்டம் ரத்து செய்ய வேண்டும் என்று நாடெங்கிலும் உள்ள இன்சூரன்ஸ் துறையுடன் தொடர்புடைய தொழிலாளர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்க கூட்டமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்இந்நிலையில் மக்களவையில் 40 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த பொது துறையை பாதுகாக்க வேண்டும் என்றும் இது போன்ற நடைமுறைகளை கொண்டுவரக் கூடாது என்று விவாதிக்கப்பட்டுள்ளதுஇவ்வாறு ஐ ஆர் டி ஏ கொண்டு வரும் பரிந்துரைகளை அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் இது சாமானிய மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்காது என்று விவாதிக்கப்பட்டுள்ளதுமத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி மிகவும் வளமான ஒன்றாக தற்பொழுது திகழ்ந்து வருகிறது இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பெரிய அளவில் பங்களித்துக் கொண்டிருக்கிறது நாட்டில் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து வருகிறதுமத்திய மாநில அரசுகளுக்கு கடன்களை கொடுத்து வருகிறது இதன் பங்குகள் அனைத்தும் பெரும்பாலும் மத்திய மாநில அரசுகள் தான் இருந்து வருகிறது தவிர தனியார் இடம் இல்லைஇப்பொழுது ஐ ஆர் டி ஏ கொண்டுவரும் பீமா சுகம் பரிந்துரையை ஏற்றால் மிகவும் ஏழை ,எளிய, சாமானிய மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்பதை அனைத்து தரப்பட்ட தொழிற்சங்கங்கள், தொழிலாளர் கூட்டமைப்புகள், நாடாளுமன்ற, மாநில அவை உறுப்பினர்கள் இது குறித்து விவாதத்து வருகிறார்கள் பொதுமக்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்த கருத்தாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்மக்களுக்கு பயனளிக்காத இப்படிப்பட்ட பரிந்துரைகளை அரசு ஏற்கக் கூடாது என்பது அனைவரின் கருத்தாக காணப்படுகிறதுமத்திய அரசு இந்த நிலைமை எவ்வாறு அணுகப்போகிறது40 கோடி மக்களின் நலனை எப்படி காக்க போகிறதுஇந்திய பொருளாதாரத்தில் வளர்ச்சியில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மிக மிக முக்கியமானது என்பதை அரசு உணருமா போன்ற விவரங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்செய்தி லயன் வெங்கடேசன்,M.A.,செங்கல்பட்டு மாவட்டம்TJU NEWS