தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகம் முழுவதிலும் உள்ள கட்டிடங்களுக்கு 300 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழகம் முழுவதிலும் இரண்டு அடுக்கு மாடிக்கு மேல் உள்ள கட்டிடங்கள் மற்றும் 300 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீடுகளுக்கு 375 சதுர அடி வரையிலும், தொழிற்சாலைகளில் 222 சதுர அடி வரையும், வணிக ரீதியிலான கட்டிடங்களுக்கு 375 சதுர அடி வரையும், கல்வி நிறுவனங்களுக்கு 150 சதுர அடி வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.