புதிய வகை கொரோனா வைரஸ்

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.அதேசமயம் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று எச்சரித்தார்.