ஜிஎஸ்டி சாலை நெரிசல் ..

செங்கல்பட்டு மாவட்டம் பழைய ஜிஎஸ்டி சாலை ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேல் சாலை விரிவாக்கம் நடைபெறாமல் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

இந்த நிலையை சம்பந்தப்பட்ட செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உடனடியாக சாலை விரிவாக்கம் செய்து கொடுக்க செங்கல்பட்டு சார்ந்த பொதுமக்களின் வியாபாரிகளின் பள்ளிக்கு செல்லும் மாணவ , மாணவிகளின் பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது

செங்கல்பட்டு உள் வட்டார மேம்பாலம் தொடங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை உள்ள நெடுஞ்சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது அனைத்து மக்களுடைய பொதுவான கோரிக்கை

இந்த சாலை பல்வேறு வங்கிகள், ரயில் நிலையம், பஸ் நிலையம், இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனம், கலைக்கல்லூரி ,
சட்டக் கல்லூரி , மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,அரசு மதுபான கடை 3 மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று என்னில் அடங்கா நிறுவனங்கள் இந்த பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது அரசின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு வருகிறார்கள்

குறிப்பாக அரசின் மூன்று மதுபான கடைகள் இயங்கு வரும் நிலையில் மிகப்பெரும் போக்குவரத்து நெரிச்சல் மற்றும் பள்ளிக்கு செல்லும் கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் தங்களுடைய வருத்தத்தையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்

எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சித் தலைவர் நெடுஞ்சாலை துறை மற்றும் அதை சார்ந்த அதிகாரிகள் இந்த பொது மக்களுடைய கோரிக்கையை விரைந்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுத்து அந்த சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை பகுதியை விரிவாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது

தமிழக அரசு, மாவட்ட ஆட்சித் தலைவர், செங்கல்பட்டு நகராட்சி இதுகுறித்து ஆவண நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று

மேற்கண்ட பொதுமக்கள் உடைய கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில் அனைத்து தரப்பட்ட மக்களின் சார்பாக வியாபாரிகளின் சார்பாக பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் சார்பாக வயதில் முதிர்ந்த பெரியவர்கள் சார்பாக
இந்த வேண்டுகோளை
இந்த கோரிக்கையை மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசுக்கு பொதுக் கோரிக்கையாக சமர்ப்பிக்கிறோம்

செய்தி
லயன் வெங்கடேசன்
செங்கல்பட்டு மாவட்டம்
TJU NEWS