அக்னி சிறகுகள் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சிகள்….
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அக்னி சிறகுகள் குழுக்கள் மூலமாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் பவள விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அக்னி சிறகுகள் மூலமாக 75 வது சுதந்திர தின பவள விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி எழுத்துப்போட்டி ஓவிய போட்டி கட்டுரை போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது இதில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமையை பயன்படுத்தி கொண்டனர் இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்பட்டது
பிறகு பவள விழாவை முன்னிட்டு சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் தாமாக முன்வந்து பலர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
தமிழ் மலர் செய்தியாளர் வேல்முருகன்