உலகப் பாவை தொடர்-6
உலகப் பாவை
6. ஒன்றுவதால்
பயன் கோடி
நுண்ணணுக்கள் ஒன்று சேர்ந்தால்,
நூறுகோடி ஆற்றல் தோன்றும்!
நுண்ணுயிர்கள்
ஒன்று சேர்ந்தால்,
நுகர்பொருள்கள் அனைத்தும் மாறும்!
எண்ணிக்கை கூடு மானால்,
எந்தஒரு பொருளும் ஆற்றல் எண்ணிக்கை நூறு கோடி எட்டுவதே இயற்கைப் பாடம்!
மண்ணில்வாழ் மனிதர் தம்முள்
வளர்ந்துவரும் பகைமை குன்றி
எண்ணத்தால் ஒன்றி வாழ்ந்தால்
எழும்பயன்கள் கோடி! கோடி!
உண்மையிதை உணர்ந்தும் நெஞ்சில்
ஒருமைப்பா டற்று வாழும்
வன்நெஞ்சர் தம்மை மாற்ற வலம்வருவாய் உலக பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்