முதியோருக்கு ஆதரவு வழங்க வேண்டும்…
அனுப்புநர்
முனைவர்.த.விஜய் பாண்டியன்
வழக்கறிஞர் (புது டெல்லி)/ சமூக ஆர்வலர்
பாளையம்பட்டி கிராமம் அருப்புக்கோட்டை தாலுகா
பெறுநர்
உயர் திரு கண்காணிப்பாளர் அவர்கள்
விருதுநகர் மாவட்டம்
பொருள் ; ஆதரவற்ற முதியோருக்கு தகுந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உறைவிடம் வழங்க வேண்டுதல் தொடர்பாக:-
மதிப்பிற்குறிய ஐயா
வணக்கம் , கடந்த 5 நாட்களுக்கும் மேலாக அருப்புகோட்டை பழைய பேருந்து நிலையத்தின் பொது கழிப்பறை ஓரத்தில் ஒரு வயதான முதியவர் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார் இவர் நிலை அறிந்து அங்கு இருக்கும் பக்கத்து நபர்கள் , இவருக்கு உணவு கொடுத்து பார்த்து வருகின்றனர் அங்கு அவர் பொது இடத்தில் படுத்து கஸ்டப்படுகிறார் அவருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை இவரை நான் காப்பகத்தில் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுத்தும் இவரின் உடல் நிலை காரணமாக சேர்க்க மறுக்கின்றனர் , ஆகவே இவர் துயர் நிலை குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன் கருணை கூர்ந்து இவரை அரசு காப்பகத்தில் சேர்ப்பதற்காக தங்களிடம் உதவி வேண்டுகிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் மிக்க நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
Dr.D.Vijay Pandian
Advocate/Social Activist
date:12/8/22