ரயில் நிலையம் மற்றும் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் மற்றும் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கிளாம்பாக்கத்தில் புதியதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது ஆகையால் செங்கல்பட்டில் இருந்து வரும் பஸ்கள் ஜிஎஸ்டி சாலையை கலந்து செல்ல வேண்டி இருப்பதால் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்புடைய வாய்ப்பு உள்ளது எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிளாம்பாக்கத்தில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்

புதிய பஸ் நிலையம் அமைந்திருக்கும் கிளம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைத்தால் அது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் வசதியாகவும் இருக்கும் என்பது அனைவருடைய பொதுவான கோரிக்கை

அதே வேளையில் அனைத்து துரித
(Fast)மின்சார ரயில்களும் வண்டலூரில் நின்று செல்ல வேண்டும் என்பது இந்த சுற்று பகுதியில் உள்ள பொதுமக்கள் தரப்பிலிருந்து பொதுக் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது

மத்திய மாநில அரசுகள் அது தொடர்பான அதிகாரிகள் இந்த பொது மக்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து விரைவில் இதை தீர்மானித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற கோரிக்கையாகும்

செய்தி
லயன்
வெங்கடேசன்,M.A ,
மாநிலச் செயலாளர்
அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம்