ஆடிக் கிருத்திகை திருவிழா..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ( அடுத்த) கெடாம்பூரில் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கைலாசகிரி மலையில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு கெடாம்பூர் தர்மகர்த்தா. உயர்திரு.K. A. ரமணன் B.E., MBA., மற்றும் K.A.,கிரி B.A., அறங்காவலர் இவர்களின் முன்னிலையிலும் மற்றும் ஊர் பொதுமக்களின் பக்தியுடன் கூடிய ஆதரவோடும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது. மற்றும் பக்தகோடிகள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு காவடி எடுத்தும் நாவில் வேலை குத்திக் கொண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் போட்டு தங்களின் நேர்த்திகடனை செலுத்தினார்கள் இதனை தொடர்ந்து பல்லாயிர கணக்கான பக்த கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயிலுக்கும் கோயிலுக்கு வரும் பக்த கோடிகளுக்கும் எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கோயில் நிர்வாகம் மூலமாக காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர்.மற்றும் ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. தமிழ்மலர். ஒளிப்பதிவாளர் சுரேஷ் வாணியம்பாடி .