சூர்யாவின் 47வது பிறந்த தினம்

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்
சூர்யாவின் 47வது பிறந்த தினம் இன்று..!

இந்திய நடிகர்

சூர்யா ஜூலை 23, 1975இல் பிறந்தார்.இவர் தமிழ்நாட்டுத் 
திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர்  என்ற படத்தில் அறிமுகமானார்.பின் (1997), நந்தா (2001), காக்க காக்க (2003), பிதாமகன் (2003), பேரழகன் (2004), வேல் (2007) , வாரணம்ஆயிரம் (2008), 
ஏழாம் அறிவு (2011), சிங்கம் 24 (2016),காப்பான்,சூரரைப் போற்று,ஜெய்பீம் போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் 
திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இன்றளவிலும் உள்ளார்.
இவரின் இயற்பெயர் சரவணன்.இவரின் பெற்றோர்:நடிகர் சிவகுமார்,
தாயார் லட்சுமி.
வாழ்க்கைத்துணை:நடிகை
ஜோதிகா.பிள்ளைகள்:தியா, தேவ்.இவரின் நடிப்புத் திறனால் மூன்று தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிஃல்ம்பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள், ஒரு சினிமா விருதுகள் மற்றும் விஜய் விருதுகள் போன்றவைகளை வென்றுள்ளார். ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் சூர்யா ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார்.சரவணன் 
என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் 
மகனும் நடிகர் கார்த்தியின் 
அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில்
இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.
இவரின் முதல் படமான
நேருக்கு நேர் திரைப்படம்
வணிக ரீதியில் வெற்றி பெற்றது.1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை வசந்த் இயக்கிருந்தார். ஆனால் இதன் பிறகு வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக காதலே நிம்மதி (1998), சந்திப்போமா (1998),பெரியண்ணா (1999),[7] பூவெல்லாம் கேட்டுப்பார் (1999). இந்தத் திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த
 ஜோதிகாவை இவர் மணந்துகொண்டார்.2001 ஆம் ஆண்டில் பாலாவின் (இயக்குனர்) இயக்கத்தில் பிதாமகன் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளியாக நடித்திருப்பார்.இந்தப் படம் இவருக்கு விமர்சகர்கள் 
மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் இவரின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.2003 இல் கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படத்தில் 
நடித்தார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இந்த இரு திரைப்படங்களும் விமர்சன , வியாபார ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதன் மூலம் தமிழகத் திரைப்படத்துறை முன்னணி நாயகர்களில் ஒருவரானார்.
மேலும் 51 வது பிஃல்ம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் துணை நடிகருக்கான விருதிற்கு பிதாமகன் திரைப்படத்தில் நடித்தற்காக பரிந்துரை செய்யப்பட்டது.
பின் பேரழகன் திரைப்படத்தில்
கல்லூரி மாணவராகவும், கூன் விழுந்த நபராகவும் இரு வேடங்களில் நடித்திருப்பார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான 52 வது பிஃல்ம்பேர் விருது பெற்றார்.2004 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து (திரைப்படம்) நடித்தார். இவர் இதில் மாணவ தலைவர் வேடத்தில் நடித்திருந்தார்.
2005 ஆம் ஆண்டில் சூர்யா மாயாவி, கஜினி ,ஆறு ஆகிய மூன்று திரைப்படங்களில் நாயகனாக நடித்தார. கஜினியில்
மறதிநோய் உள்ளவராக நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் பாலிவுட்டில் மொழிமாற்றம் செய்யப்பட்டு (கஜினி (2008 திரைப்படம்) அதே பெயரில் வெளியானது. மாயாவி, ஆறு ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது.2006 இல் சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்), 2007 இல் வேல் (திரைப்படம்) போன்றவற்றில் நடித்தார். இதில் வேல் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.2008 இல் மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில்
நடித்தார்.இதில் தந்தை, மகன் ஆகிய இருவேடங்களில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார்2009 இல் அயன் (திரைப்படம்), ஆதவன் (திரைப்படம்) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2010 ஆம் ஆண்டில் சிங்கம் திரைப்படத்தில் நடித்தார். இதில் அனுஷ்கா ஷெட்டி உடன் நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து சிங்கம் 2 , சிங்கம்3 என வெளியாகின.
ராம் கோபால் வர்மா 
இயக்கத்தில்  ஹிந்தி மற்றும்
தெலுங்கு மொழிகளில் 
உருவான ரத்தசரித்திரம் திரைப்படத்தில் நடித்தார்.
ஏ. ஆர்.முருகதாஸ்இயக்கத்தில்
ஏழாம்அறிவு திரைப்படத்தில் போதி தருமன் வேடத்தில் நடித்தார்.இவரது மனைவி ஜோதிகா நடித்த 36 வயதினிலே எனும் திரைப்படத்தை தயாரித்தார்.
2012 ஆம் ஆண்டு இயக்குனர் கே. வி. ஆனந்த்
இயக்கிய மாற்றான் என்ற திரைப்படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து சிங்கம் 2 என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்தார். இது 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்பட சிங்கம் தொடரின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த திரைப்படம் 5 ஜூலை 2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.2014 ஆம் ஆண்டில் இயக்குனர் லிங்குசாமி 
இயக்கத்தில் அஞ்சான் என்ற திரைப்படம் 15 ஒகஸ்ட் 2014 அன்று வெளியாகி கலப்பு விமர்சனம் பெற்றது. அதே ஆண்டில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி என்ற திரைப்படமும் வெளியாகி கலப்பு விமர்சனம் பெற்றது.
“அகரம்”என்ற ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.
திரையுலக மார்க்கண்டேயர் நடிகர் சிவகுமாரின் வாரிசு என்பதை கலையாற்றலால் பல தடவைகள் நிரூபித்துள்ளார்.47 வயதுக்குள் அசுர சாதனை படைத்த நடிகர் என்ற தடத்தை பதித்த நடிகர் சூர்யா.சமீபத்தில் இவர் நடித்து அமோக வெற்றி பெற்ற “சூரரைப் போற்று”
திரைப்படம் ,22.07.2022 அன்று 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில்  5 தேசிய விருதுகளைப் பெற்றது.சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை இவ்வாண்டு பெறுகிறார்.
23.07.2022 சூர்யாவின் பிறந்த நாள் பரிசாக இது அமைந்தது சிறப்பிற்குரியது.காக்க காக்க படப்பிடிப்பிற்காக இலங்கை நுவரெலியா வந்த சூர்யாவை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் “சூர்யா”

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.