கருணாநிதியின் சிலை அமைப்பதை எதிர்த்து
திருவண்ணமலையில் கிரிவலப்பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமைப்பதை எதிர்த்து, ஜி.கார்த்திக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில், நீர் போக்குவரத்து நிலத்தை ஆக்கிரமித்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதாகவும், அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், வேங்கைக்கால் பகுதியில் ஜீவா கல்வி அறக்கட்டளை நிலம் வாங்கியுள்ளதாகவும், அந்த நிலத்துக்கு அருகே, நீர் போக்குவரத்து நிலத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளது என்றும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.