அமரர் ஏ.வின்சென்ட் அவர்களின் 94-வது ஜனன தினம்

இந்திய சினிமா வரலாற்றின் ஒளிப்பதிவு மேதையாக விளங்கிய ஒளிப்பதிவாளரும்,
இயக்குனருமான
அமரர்:ஏ.வின்சென்ட்  அவர்களின் 94வது ஜனன தினம் இன்றாகும்.

 ‘வின்சென்ட் மாஸ்டர்’ என்று தமிழ் சினிமா உலகினரால் அன்புடன் அழைக்கப்படும் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் 1928-ம் ஆண்டு கேரள மாநில கோழிக்கோட்டில் பிறந்தார். வின்சென்டின் தாய்மொழி கொங்கணி. தந்தையின் புகைப்பட ஸ்டுடியோவில் கிடைத்த அனுபவத்தால் புகைப்படக் கலையில் சிறுவயதிலேயே வின்சென்ட்டுக்கு ஆர்வம் ஏற்பட்டது.1947-ம் ஆண்டு சென்னைக்கு வந்த அவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியில் சேர்ந்தார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் கே.ராம்நாத் மற்றும் கமால் கோஷிடம் அனுபவம் பெற்றார். அதற்குமுன்பு அவர் முதலில் ஒளிப்பதிவு செய்த படம் ‘ப்ரதுகு தெருவு’என்ற தெலுங்குப் படம். இளைஞராக இருந்த வின்சென்டை இப்படத்தின் ஒளிப்பதிவுக்காகப் பரிந்துரைத்தவர் பழம்பெரும் நட…