கொலை வழக்கில் சகோதரர் கைது..

வீட்டில் தூங்கிய இளைஞர் கொலை வழக்கில் சகோதரர் கைது?
மணப்பாறை கோவிந்தராஜபுரம்
பகுதியில் குணசீலன் தனது 7 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவரது 4 வது மகன் லெட்சமி நாரயணன்(31) சொந்தமாக வாடகை கார் வைத்திருந்த நிலையில் குடும்ப வரவு செலவுகளையும் பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஜூன்-2 தேதி புதன்கிழமை நள்ளிரவு வீட்டில் தூங்கிய இலட்சுமி நாராயணன் பல இடங்களில் குத்தப்பட்டு இறந்துகிடந்தார்.இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்.துணை கண்காணிப்பாளர் ராமநாதன்.காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட மணப்பாறை போலீசார்லட்சுமிநாராயணன் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த லட்சுமிநாராயணன் சகோதரர் ஜானகிராமனை (29) காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை செய்ததில் அவரே கொலை செய்தது தெரிய வந்தது, குடும்ப வரவு செலவு பார்ப்பதில் சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஏற்கனவே இந்த பிரச்சினையில் லெட்சுமிநாரயணன் சகோதரர்களால் தாக்கபட்டு கை முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் இந்த நிலையில் லெட்சுமிநாராயனனை கத்தரிகோல் கொண்டு ஜானகிராம் கழுத்தில் குத்திக் கொன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜானகிராமனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றதில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
P.பாலு மணப்பாறை செய்தியாளர்,