ஜாதிகள் இல்லையடி பாப்பா…

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
என்று சொன்ன மகாகவி பாரதி அவர்களுடைய வாக்கிற்கிணங்க

ஓய்வறியாது உழைத்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களளின் வழித்தோன்றல் தமிழகத்தின் விடிவெள்ளி தளபதி ஸ்டாலின் அவர்களுடைய அரசு வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் முத்தாய்ப்பாக

பிற்காலத்தில் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு மாணவன் பெயர் தந்தையின் பெயர்
நாடு மற்றும் மதம் இவைகளை மட்டுமே குறிப்பிட்டு பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி
சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முயற்சிப்பீர்
களனால் எதிர்கால தமிழ்நாடு
ஜாதி மத பிரச்சனைகளை இன்றி பெரியார் ,
பேரறிஞர் அண்ணா, கலைஞர் அவர்கள் கண்ட கனவு நினைவாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை

அதேவேளையில் இந்த முறையில் படிப்பை முடித்து வருகின்ற இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு
கள் ,மேற்படிப்பு, திருமணம் போன்ற அரசின் அத்தனை சலுகைகளும் அவ்வாறு வருகின்ற இளைய தலைமுறை
களுக்கு சலுகைகள் கிடைக்க வழிவகை செய்ய தாங்கள் முன்வந்தால்

இதுதான் கலைஞர் அவர்களுக்கு நீங்கள் செய்கின்ற காணிக்கை

நாட்டால் இந்தியன் பேசும் மொழியால் தமிழன் என்கின்ற நிலை மாற வேண்டும்

இதுதான் உண்மையான திராவிட மாடல்
இதுதான் உண்மையான திராவிட மாடல் ஆட்சி என்ற உணர்வு இந்த தேசம் முழுவதும் பரவ வேண்டும்

இது போன்ற நிலை வருங்கால சமுதாயத்தில்
உருவானால் ஜாதிய பொருளாதார பிரச்சனைகள் இன்றி தமிழகம் அனைத்து நிலைகளிலும் பெருமையோடு நடைபெறும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை

தமிழகம் முழுவதும் உள்ள ஜாதி பெயர்களை எடுத்த தமிழக அரசு
பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் சமுதாயத்திலே அந்த ஜாதி பெயர்களை எடுத்து விட்டால்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கண்ட கனவு
கொண்ட கொள்கை போன்ற லட்சியங்கள் நிறைவேறும்

இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க முன் வருமா தமிழகத்தில் இருக்கின்ற
பிற கட்சிகள் ஒத்துழைப்பு தருமா
பொது மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

வாழ்க இந்திய தேசம்
வாழ்க தமிழக அரசு
வளர்க திராவிட மாடல்

செய்தி
லயன் வெங்கடேசன்,M.A, செங்கல்பட்டு மாவட்டம்