பொங்கல் பரிசு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பொது மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பில் அரசியல் தலைவர்கள் படங்கள் இருக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 தொகையுடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்தது.

மேலும், பொங்கல் பரிசுத்தொகைக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் இடம் பெற்று உள்ளதாகவும், இது வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின் போது, இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம் பெற்ற டோக்கன் விநியோகம் செய்யப்பட்டாதவும், கட்சியினர் ஆர்வ மிகுதியால் இதை வழங்கி விட்டதாகவும் அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழங்கும் டோக்கன்களில் எந்த ஒரு கட்சி தலைவர்களின் படங்களும் இடம்பெறக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.