வராக்.. வெள்ளி காகிதம்
ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது தெரியுமா?
பொதுவாக ஸ்வீட் கடைகளில் வாங்குகிற ஸ்வீட்டுகள் மேல் ஒரு சில்வர் பேப்பர் ஒட்டிவைத்திருப்பார்கள். அந்த சில்வர் பேப்பர் அழகிற்காகவும் ஒட்டப்பட்டிருக்கும். அது ஒட்டிய பின்னர் அந்த ஸ்வீட்டில் இருந்து அதை எடுக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால பெரும்பாலானவர்கள் அந்த சில்வர் பேப்பரோடவே ஸ்வீட்டை சாப்பிடுவார்கள்.. ஸ்வீட் மேல ஒட்டியிருக்காங்கன்னா அது என்ன செய்திடப்போகுதுங்கிற நம்பிக்கை தான்.
இது சில்வர் ஃபாயில், சில்வர் ரேக் என சொல்லப்படுகின்றது. ஆனால் இதன் ஒரிஜினல் பெயர் வராக்..
இந்த வராக் எனப்படுவது எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்று சொன்னால் அதிர்ச்சியின் எல்லைக்கே போக நேரிடும். இருந்தாலும் எல்லாரும் தெரிந்து கொண்டு இனி அந்த வராக் பயன்படுத்தப்பட்ட இனிப்புகளை வாங்கி உண்பதை விட்டுவிடலாமே என்ற எண்ணத்தில் தான் அதைப்பற்றியான செய்தி இங்கே தரப்படுகின்றது..
வராக்’ எனப்படும் இந்த ஜரிகைதாள் மாட்டின் குடல் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது என்பது முதல் ஷாக்..
தகவல் லைன் வெங்கடேசன் செங்கல்பட்டு.