முள்ளாய் குத்திய சொல்..

கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படத்திற்க்கு கிடைக்கும் ஆதரவை விட…

லட்சக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படத்திற்க்கு ஆதரவு கிடைத்துள்ளது…

முள்ளாய் குத்திய சொல்
இயக்குனர் : கணேஷ் Tuticorin
இந்த படத்தின் Posterலேயே என்ன கதை இது என்று அனைவரையும் ஈர்க்கும் விதமாக காட்சியமைக்கப்பட்டது..அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் மாரீ செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கர்ணன் திரைப்படத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளார்கள்.சொல்லப்போனால் கர்ணன் படத்திற்க்கு எதிர்மறையான படமாக முள்ளாய் குத்திய சொல் படம் அமைந்துள்ளது.
இப்படத்தில் கதாபாத்திரத்தின் பெயர்கள் கர்ணன், கண்ணபிரான் என்று வைத்துள்ளனர்..இதில் கர்ணன் கதாபாத்திரத்தை கெட்டவனாகவும் கண்ணபிரான் கதாபாத்திரத்தை நல்லவனாகவும் காட்சியமைக்கப்பட்டுள்ளது..அதுமட்டுமில்லாமல் படத்தின் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தின் பெயர் செல்வராஜ் இதில் 2 வசனங்கள் உள்ளது.
காவல் ஆய்வாளர் வழக்கறிஞரை வெளியே போங்க என்று சொல்லும் போது ,அதற்கு வழக்கறிஞர் *சார் நான் Advocate மாரீ சார் ஜூனியர் சொல்வராஜ் என்று சொல்லும் காட்சி , மற்றும் கடைசியில் காவல் ஆய்வாளர் வழக்கறிஞரை பார்த்து *உங்க மாரீ சார்ட்ட சொல்லுங்க இந்த கண்ணபிரான் ரொம்ப நல்லவன்னு* இந்த வசனங்கள் ரசிக்கும் படியாகவும் ,கர்ணன் படத்தின் இயக்குனர் பெயரையும் கதாபாத்திரமாக வச்சுட்டாங்காப்பானு அனைவரும் சொல்லும் அளவிற்க்கு இப்படத்தின் கதை எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது..

பல்வேறு சர்ச்சைகள் ,தடைகளை தாண்டி இந்த படமானது
சமீபத்தில் MX Player OTTயில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கதையின் கரு
2 நண்பர்களின் 20 வருட நட்பு பணத்தாலும் சாதியாலும் பிரிவை சந்திக்கிறது என்பதையும், PCR ACT (வன்கொடுமை தடுப்புச்சட்டம்) ஐ காவல்துறையினரும் வழக்கறிஞரும் தவறாக பயன்படுத்துவதால் என்ன நடக்கிறது என்பதை கற்பனை கலந்து 50நிமிட படமாக உருவாக்கி இருக்கிறார்..
PCR actஇல் இது மாதிரிலாம் நடக்குமா என்று பார்வையாளர்களே யோசிக்கும் படி இருக்கிறது முள்ளாய் குத்திய சொல் .படத்தின் தலைப்பிற்க்கு ஏற்றவாறு படத்தின் வசனங்களும் மனதில் முள்ளாய் குத்துகிறது.
இப்படத்தின் வெளியீட்டிற்க்கு உறுதுணையாக செயல்பட்டவர்கள் டிஜிட்டல் OTT PRO R.S மணி பாரதி ராஜு , NMM Films கம்பெனி. படத்தில்
புதுமுக கதாநாயகர்கள் ஜான்சன், இசக்கி ராஜா, அருண்குமார், ராஜகுமாரி, பாரதி, பப்பா சங்கர், பிரகாஷ்,சீலன் ஸ்ருதி, சரவணன், இக்னேசியஸ் மற்றும் பலர்…
கேமரா : விவேக் ஒளிப்பதிவு : மனிஷ் D.F Tech G4 இசை : அபு ஒலிப்பதிவு : சீலன்
உதவி இயக்குனர்கள் : மணிகண்டன்,வெங்கடேஷ், மிதுன் ராம்,மதன சங்கர்,காளிதாஸ்,அருண் D, கார்த்திக்.

படத்தின் ஆங்காங்கே சிலகுறைகள் இருந்தாலும் கதை மிக வலுவாக இருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.அதிக எதார்த்தம் நிறைந்துள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் குறும்பட இயக்குனர் கணேஷ் Tuticorin ,வெள்ளித்திரையில் தடம் பதிக்க வாய்ப்பு கிடைக்குமா????

வெற்றி விளிம்பில் ஒரு உன்னதத் திரைப்படம்* *சிறகுகள் விரிக்க வாழ்த்துகிறோம்*