சரும பிரச்சனைகளை தீர்க்க பீட்ரூட்!

பீட்ரூட் மற்றும் எலுமிச்சை

ஒரு தேக்கரண்டி பீட்ருட் சாற்றினை எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த செயலை இரவு உறங்கப் போகும் முன்னர் செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர ஜொலி ஜொலிப்பான முகத்தைப் பெறலாம்.

பீட்ரூட் மற்றும் தயிர்

இரண்டு தேக்கரண்டி பீட்ரூட் சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி, நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதன்மூலம் பருக்கள் மட்டுமின்றி, அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

பூட்ரூட் மற்றும் சர்க்கரை

ஒரு தேக்கரண்டி பீட்ரூட் சாற்றுடன், சர்க்கரை சேர்த்து கலந்து முகத்தை ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வப்போது செய்து வர கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கும். இதனை வாரத்தில் 3 நாட்கள் செய்து வர வேண்டும்.

பூட்ரூட் மற்றும் பால்

பீட்ரூட் சாற்றுடன் தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து முகத்திற்கு முகமூடி போல போட்டு வந்தால், சரும வறட்சி படிப்படியாக நீங்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.