சிதம்பரம் நடராஜர் கோயிலில் கவர்னர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்கு தமிழக கவர்னர் ரவி தன் துணைவியாருடன் வந்தார். அவருக்கு தீட்சிதர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தொடர்ந்து வேதமந்திரங்கள் கூறி நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரியை தரிசனம் செய்தனர். அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கவர்னர் ரவி சிதம்பரம் வந்தடைந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.